நாட்டராயசுவாமி கோயிலின் ராஜகோபுரம் முகப்பு மண்டபம்; அமைச்சர் திறப்பு
வெள்ளகோவில்,ஆக.21: வெள்ளகோவில் நாட்டராயசுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது மேட்டுப்பாளையம் நாட்டராயசுவாமி கோயிலில் நிதியின் மூலம் ரூ.97.09 லட்சத்தில் கட்டப்பட்ட முகப்பு மண்டபம் மற்றும் கட்டிடங்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார்.
காங்கயம் நகராட்சி, அகிலாண்டபுரம் சிவாலாயா மண்டபம் மற்றும் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் பாப்பினி ஊராட்சி என்.ஆர்.ஜி மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு, வேளாண்மைத்துறையின் சார்பில் காய்கறி விதைகள், முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில்காங்கயம் நகர்மன்ற தலைவர் சூரியபிரகாஷ், ஆணையார் பால்ராஜ், வட்டாச்சியர் மோகனன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், நகர செயலாளர் சேமலையப்பன், ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணைபிரகாஷ், செயல் அலுவலர் மாலதி, மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.