குறுக்கே வந்த மன நலம் பாதித்த நபர் பைக்கில் தவறி விழுந்த வாலிபர் பலி
காங்கயம், ஆக.21: காங்கயம் திட்டுப்பாறையை சேர்ந்த கூலித்தொழிலாளி நந்தகுமார் (25). இவர் கடந்த 18ம் தேதி இரவு வேலை முடிந்து தனது நண்பர் அபிமன்யு என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். காங்கயம்- சென்னிமலை சாலை வடக்குப்பாளையம் பிரிவு அருகே வந்தபோது குறுக்கே மனம் நலம் பாதித்த நபர் வந்தார்.
Advertisement
அவர் மீது மோதாமல் இருக்க பைக்கை திருப்பியபோது அவர் மீது லேசாக மோதி இவர்கள் விழுந்தனர். இதில் 2 பேரும் காயம் அடைந்தனர். மன நலம் பாதித்த நபர் தப்பினார். இதில் சிகிச்சை பலனின்றி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று நந்தகுமா உயிரிழந்தார். காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Advertisement