திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் கண் கவர் கைத்தறி ஆடைகள் கண்காட்சி
திருப்பூர், ஆக.21: திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கல்லூரி பேரவை சார்பில் நேற்று கல்லூரி வளாகத்தில் கைத்தறி கண்காட்சி நடைபெற்றது. இதனை கல்லூரி முதல்வர் வசந்தி தொடங்கி வைத்தார். கைத்தறிக்கு கை கொடுப்பேன் என்ற இந்த நிகழ்ச்சியில் உடுமலை, படியூர், அன்னூர் சர்வோதயா சங்கம், செளடாம்பிகை கைத்தறி சேலை ஆகியவையை சேர்ந்த விற்பனையாளர்கள் கலந்துகொண்டனர்.
Advertisement
இதில் நூல் சேலைகள், பட்டுச் சேலைகள், பெட்ஷீட்கள், கைத்தறி துண்டுகள், சட்டைகள் ஆகியவை கண்ணை வரும் நிறத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கைத்தறி ஆடைகளை வாங்கினர். நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பேரவைப் பொறுப்பாளர்கள் இந்த கைத்தறி கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
Advertisement