பல்லடம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு
பல்லடம், செப்.19: பல்லடம் பகுதியில் மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மனிஷ் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, பல்லடம் ஊராட்சி ஒன்றியம் மாணிக்கபுரம் ஊராட்சியை சேர்ந்த அம்மாபாளையம் பகுதியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 3 வீடுகள், மாணிக்காபுரம் ஊராட்சி அண்ணாமலை கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் ஈட்டி. குயில், கடம்பூ, வேங்கை, மாகக்கனி, சீத்தா, செண்பகம் உள்ளிட்ட மரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை.
மகாத்மாக காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.4.54 லட்சம் மதிப்பீட்டில் பெரிய தோட்டம் குட்டை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் குறித்து சமந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சங்கமித்திரை, பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேலுசாமி, பானுப்பிரியா, உதவி பொறியாளர் செந்தில்வடிவு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.