திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டு தூய்மை பணியாளருக்கு தீபாவளி பரிசு
திருப்பூர், அக். 18: திருப்பூர் மாநகராட்சி 22வது வார்டில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 25வது ஆண்டாக தீபாவளி பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், குடிநீர் பராமரிப்பாளர்கள், தெருவிளக்கு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள், மலேரியா கொசுமருந்து அடிக்கும் பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், பாதாள சாக்கடை பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள், மாநகராட்சி பணி சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் மண்டல தலைவரும், கவுன்சிலருமான ராதாகிருஷ்ணன் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில் 22வது வார்டு செயலாளர் ராஜ்குமார், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி, மோகன், குமார் மற்றும் தூய்மை மேற்பார்வையாளர்கள் சுதாகர், சந்திரிக்கா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.