கூட்ட நெரிசலை தவிர்க்க மாநாட்டு மைய வளாகத்தில் வாகனங்களை நிறுத்தலாம்
திருப்பூர், அக். 18: திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அமித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் கடைவீதிகளுக்கு செல்ல வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்துவதால் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், பொதுமக்களின் நலன்கருதி கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குமரன் சாலையில் உள்ள மாநாட்டு மைய வளாகத்தில், தனியாக கட்டப்பட்டுள்ள தரை மற்றும் 4 தளங்கள் கொண்ட 2 அல்லது 4 சக்கர வாகன நிறுத்துமிடத்தில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் கட்டணம் செலுத்தி வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.
இருசக்கர வாகனத்திற்கு 6 மணி நேரத்திற்கு ரூ.20, அதற்கு மேல் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் மேல் ரூ.20, 4 சக்கர வாகனம் ஒன்றுக்கு 6 மணி நேரத்திற்கு ரூ.50, அதற்கு மேல் ரூ.50 செலுத்த வேண்டும். வருகிற 20ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தங்களது வாகனங்களை நிறுத்தி பயன்பெறலாம். இரவு 9 மணிக்கு மேல் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. நிறுத்திய வாகனங்களை இரவு 10 மணி வரை மட்டுமே திருப்பி எடுக்க அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.