பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது
திருப்பூர்,செப்.18: திருப்பூர், திருமுருகன்பூண்டி அருகே பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், திருமுருகன்பூண்டி அடுத்த திருநீலகண்டர் வீதியை சேர்ந்தவர் துர்கா தேவி (32), இவர் நேற்று முன்தினம் வீட்டின் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, அதே காம்பவுண்டில் வசிக்கும் சுரேஷ்குமார் (33), என்பவர் பெண் குளிப்பதை தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார்.
Advertisement
இதனை பார்த்த அந்த பெண் கூச்சலிட்டார். பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தினார். இது குறித்து துர்கா தேவி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
Advertisement