தூய்மை பணியாளருக்கு போனஸ் கவுன்சிலர் நாகராஜ் வழங்கினார்
திருப்பூர், அக். 17: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ம.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளரும், 24வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் ஏற்பாட்டில், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வேலைசெய்து வரும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் 140 பேருக்கு காந்திநகர் ஈ.பி.காலனியில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இதனை கவுன்சிலர் நாகராஜ் வழங்கினார். இதன் பின்னர் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சாந்தாமணி, குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், பொருளாளர் நல்லூர் மணி, அவைத்தலைவர் நேமிநாதன், மாநகர் மாவட்ட துணை செயலாளர் பூபதி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் கெச்சப்பன், மாநில இளைஞரணி துணை செயலாளர் தமிழ்செல்வன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சங்கர்கணேஷ், துணை அமைப்பாளர் மாதேஷ், குமரவேல், சண்முக சுந்தரம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.