பயணிகள் நிழற்குடை, வடிகால் கட்ட பூமி பூஜை
உடுமலை,செப்.17: உடுமலை அடுத்துள்ள, மடத்துக்குளம் ஒன்றியம் ஜோத்தம்பட்டி, அரியநாச்சிபாளையம், புதூர்மடத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்கூடை மற்றும் கணியூர், பேரூராட்சியில் ரூ.7.75 லட்சம் மதிப்பில் வடிகால் அமைப்பதற்கு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஈஸ்வரசாமி எம்பி கலந்து கொண்டு மக்கள் நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்தார்.
Advertisement
இந்நிகழ்வில் மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாகுல் அமீது, கணியூர் பேரூராட்சி மன்றத் தலைவர், துணை தலைவர், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் அவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Advertisement