ஆட்டோ கன்சல்டிங் உரிமையாளருக்கு கத்திக்குத்து: 4 பேர் கும்பலுக்கு வலை
திருப்பூர், அக். 16: திருப்பூர், காசிபாளையம் ரோடு, எம்.ஜி.ஆர் நகர் 3வது வீதியை சேர்ந்தவர் தினேஷ் (எ)விஷ்ணு (30). இவர், ராக்கியாபாளையம் பகுதியில் ஆட்டோ கன்சல்டிங் நடத்தி வருகிறார். இந்நிலையில் தினேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நான்கு பேர் இரண்டு பைக்கில் வந்து தினேஷிடம், விஷ்ணு, பொன்ராம் ஆகியோர் குறித்து விசாரித்துள்ளனர்.
Advertisement
அதற்கு தினேஷ் அவர்கள் பற்றி தனக்கு தெரியாது என பதிலளித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் தினேஷை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தொடர்ந்து ரத்தவெள்ளத்தில் கிடந்த தினேஷை மீட்டு சிகிச்சைக்காக நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement