திருப்பூரில் திடீர் மழை: பொதுமக்கள் அவதி
திருப்பூர், நவ. 15: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. மழையால் திருப்பூர் அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி ரோடு, பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு, மங்கலம் ரோடு, காங்கயம் ரோடுகளில் மழைநீர் தேங்கியது.
Advertisement
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். அதேபோல் நொய்யல் வீதி அரசு பள்ளியிலும் மழைநீர் தேங்கியது. காலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகளும் குடை பிடித்தபடி சென்றனர். காலை நேரத்தில் பெய்த மழையால், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
Advertisement