22 வது வார்டு திமுக ஆலோசனை கூட்டம்
திருப்பூர்,செப்.15:திருப்பூர், அண்ணா காலனி பகுதிக்கழகம் 22-வது வார்டுக்குட்பட்ட பிஎல்ஏ நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று 22-வது வார்டு கவுன்சிலர் அலுவலகத்தில் நடைபெற்றது. 22-வது வார்டு கழக துணை செயலாளர் பூபதி தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Advertisement
கூட்டத்தில் இன்று அண்ணா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, வாக்குசாவடி முன்பு உறுதிமொழி எடுப்பது, செப்.17 ல் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வது, செப்.20 ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Advertisement