கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
திருப்பூர், ஆக. 15: திருப்பூர், ஷெரீப் காலனியில் செயல்பட்டு வரும் கிட்ஸ் கிளப் சர்வதேசப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா பள்ளி வளாகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளியின் தலைவர் மோகன் கார்த்திக் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ஐஸ்வர்யா நிகில் சுரேஷ் வரவேற்றார்.
பள்ளியில் பயிலும் பிரி கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள், மாணவ- மாணவிகள் கிருஷ்ணர் வேடம் அணிந்து நடனம் ஆடியும், நாடகமாக நடித்தும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அனைவரையும் மகிழ்வூட்டினர். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி முதல்வர் நிவேதிகா குழந்தைகளைப் பாராட்டியும், கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றியும் சிறப்புரை ஆற்றி நன்றி கூறினார்.