மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்
திருப்பூர், செப்.13: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை பெற மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அவசியம். இதுபோல் வாகனங்கள் உள்ளிட்டவைகளை பெற பலரும் வாகனங்களை அதிகாரிகள் முன் ஓட்டி காண்பிக்க வேண்டும்.
Advertisement
இதற்காக அனைத்தும் ஒரே இடத்தில் மாற்றுத்திறனாளிகள் மேற்கொள்ளும் வகையில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமில், 100க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர் என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி சரவணகுமார் கூறினார்.
Advertisement