ஊர்வல மோதலில் மேலும் ஒருவர் கைது
திருப்பூர், செப்.11: திருப்பூரில், விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த 30ம் தேதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது கொங்கு மெயின் ரோடு டவர்லைன் அருகில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
Advertisement
இதுகுறித்து இருதரப்பினரின் புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், போயம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற பூனை மணியை (29) என்பவரை கடந்த 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் கொடிக்கம்பம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Advertisement