கஞ்சா விற்ற 7 பேர் கைது
திருப்பூர்,செப்.10: திருப்பூர், தெற்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது மத்திய பஸ் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் பரமசிவம் (24), சங்கையா (23), என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 4100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
அதே போல் மாநகராட்சி அலுவலகம் அருகில் கஞ்சா விற்ற ஜித்துகுரு (22), தீபக் மாஜி (19), தஸ்ரக் மொட்டாலி (24), ஆகியோரை கைது செய்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல் 15.வேலம்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான 25 முக்கில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சுப்பாராம் (26), தீரஜ்குமார் (27), ஆகியோரை கைது செய்து 1,100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.