சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சார்பில் பழங்குடியினருக்கு விழிப்புணர்வு
அவிநாசி, டிச. 8: அவிநாசி அருகே கருவலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. யாதவ்கிரீஷ் அசோக் தலைமையில் நடைபெற்றது.
Advertisement
மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் நல அலுவலர் சதீஷ், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் அரசு சிறப்பு வழக்குரைஞர் மனோகரன், திருப்பூர் மாவட்ட போலீஸ் டி.எஸ்.பி. (குற்றப்பிரிவு) வெற்றிவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவிநாசி போலீஸ் டி.எஸ்.பி. சிவக்குமார் வரவேற்றார். அவிநாசி இன்ஸ்பெக்டர் ராஜாபிரபு நன்றி கூறினார். இதில், கருவலூர் கிராம மக்கள் மற்றும் அவிநாசி போலீசார் பலர் பங்கேற்றனர். நிறைவாக அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.
Advertisement