குப்பையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
திருப்பூர், ஆக.7: திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகளை சிட்கோ பகுதியில் உள்ள பேப்ரிக்கேசன் ரோட்டோரத்தில் கொட்டி செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகத்தினர் குப்பைகளை அள்ளவில்லை.
இதனால் அப்பகுதியில் குப்பை மலைபோல் தேங்கி ரோட்டின் மறுபுறம் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை அள்ளக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகள் அள்ளப்பட்டு பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.