விஜயதசமி தினத்தையொட்டி கேஎம்சி சீனியர் செகண்டரி பள்ளியில் மாணவர் சேர்க்கை
அவிநாசி, அக்.4: அவிநாசி அருகே பெருமாநல்லூரில் உள்ள கேஎம்சி சீனியர் செகண்டரி பள்ளியில் விஜயதசமி தினத்தையொட்டி மாணவர் சேர்க்கை வித்யாரம்பம் நடந்தது. தொடர்ந்து பள்ளியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமாக பள்ளித்தாளாளர் மனோகரன் விளக்கி பேசினார்.
Advertisement
பள்ளித்தலைவர் சண்முகம், லோகநாயகி ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் விழாவில், பள்ளித்தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா கற்றல்இனிது என்பது குறித்து பேசினார். பள்ளி முதல்வர் தனலட்சுமி முரளிதரன், தலைமை ஆசிரியை பிரேமலதா, ஆசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் ஏராளமான பெற்றோர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
Advertisement