தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.25 ஆயிரம் திருட்டு
திருப்பூர், நவ.1: திருப்பூர் காவிலிபாளையம் புதூர் வேப்பங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முத்துமாலைசாமி (58). இவருக்கு திருமணமாகி மகன்கள் உள்ளனர். முத்துமாலைசாமி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊரான மதுரைக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துமாலைசாமி வீட்டிற்கு சென்று பார்த்தபோது அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. தொடர்ந்து, முத்துமாலைசாமி 15.வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.