வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை
திருப்பூர்,அக்.1: ஒடிசாவை சேர்ந்தவர் பூமி பெஹரா (22). இவர் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவரை பிரிந்து திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் உள்ள பனியன் நிறுவன அறையில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக மன அழுத்ததில் இருந்துள்ளார்.
Advertisement
கடந்த 26ம் தேதி பூமி பெஹரா விடுதி அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு சிகிச்சைக்காக அனைப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பூமி பெஹரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement