கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள்
திருப்பூர், செப்.30: திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலாவதியான சானிடைசர் பாட்டில்கள் கிடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை, வேலைவாய்ப்பு அலுவலகம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, இ சேவை மையம், தபால் நிலையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நேற்றைய தினம் கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் சுமார் 7க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டிகளில் சானிடைசர் பாட்டில்கள் இருந்தன. 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் காலாவதியான இவை பொதுவெளியில் வைக்கப்பட்டு இருந்தது. பல்வேறு சேவைகளையும் பெற வரும் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இதனை எடுத்துச் சென்று பயன்படுத்தினால் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள நிலையில் அலுவலர்கள் இதனை அஜாக்கிரதையாக வைத்துவிட்டு சென்றதாக சமூக ஆர்வலர்கள் பலரும் குற்றம் சாட்டினர்.