தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
திருப்பூர், அக். 29: திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 31ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (அறை எண் 439) நடை பெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ளார்கள்.
வேலையளிக்கும் நிறுவனங்களால் தேர்வு செய்யப்படும் வேலைநாடுநர்களுக்கு முகாம் நாளன்று பணிநியமன ஆணை வழங்கப்படும்.
Advertisement