செல்போன், பைக் பறிப்பு; 4 பேர் கைது
Advertisement
திருப்பூர், அக். 28: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தர் (26). இவர் பூ மார்க்கெட்டில் ஒரு கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் பூக்கடையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ஈஸ்வரன் கோவில் அருகே மதுபோதையில் இருந்த 4 பேர் தரை வழிமறித்து, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்றனர்.இதுகுறித்து தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட பூண்டி பகுதியை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (30), ராதாநகரை சேர்ந்த தாமோதரன் (21), சின்னக்கரை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32), வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த மோகன்குமார் (25), ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
Advertisement