எரிசனம்பட்டி நூலக கட்டிடத்தை புதுப்பிக்க கோரிக்கை
Advertisement
உடுமலை, அக். 28: உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டி கிராமத்தில் நூலக வளாகம் உள்ளது. இந்த நூலக கட்டிடம் மிகவும் பழமையானதால் பழுதடைந்து காணப்படுகிறது. இந்த நூலகத்துக்கு தினசரி ஏராளமான வாசகர்கள் வந்து படித்து செல்கின்றனர்.நூலக வளாகத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால், கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால், விஷ ஜந்துக்கள் நூலகத்துக்குள் வருவதால் வாசகர்கள் அச்சமடைகின்றனர்.
எனவே, கிராம வறுமை ஒழிப்பு சங்க கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். நூலக கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement