திருடர்கள் எச்சரிக்கை திருப்பூர் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பேனர்
திருப்பூர், செப்.24: பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ரயில் மூலமாக திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து இறங்குகின்றனர். இதை போல், பல்வேறு ஊர்களுக்கும் திருப்பூரிலிருந்து ரயில் மூலமாக பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ரயில் நிலையத்திலும் ரயில் பயணத்தின் போதும் பாதுகாப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இருப்பினும், அவ்வப்போது ரயிலில் வழிப்பறி சம்பவங்களும் ரயில் நிலையத்தில் திருட்டு சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.
இதனை தடுக்கவும், பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் திருப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணத்தின் போதும், ரயில் நிலையத்திலும் தங்கள் உடமைகள் எவ்வாறு திருடப்படுகிறது என்பது குறித்து படத்துடன் கூடிய விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.