மறியலில் ஈடுபட்ட 160 மின் ஊழியர்கள் கைது
திருப்பூர், செப்.24: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிர்வாகம் தினக்கூலி வழங்கிட வேண்டும். அரசாணை 950 நாள் 8-8-1990-ல் தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக சங்கத்தின் திட்ட தலைவர் மோகன்தாஸ் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை வலியுறுத்திய திருப்பூர் பெருமாநல்லூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மின் ஊழியர் சங்கத்தினர் 60 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிகழ்வில், முன்னாள் திட்ட தலைவர் வீரன், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சம்பத் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.