மலைகிராமத்தில் இருந்து நோயாளியை தொட்டில் கட்டி தூக்கி சென்றனர்
Advertisement
உடுமலை, ஆக. 19: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஈசல்திட்டு பழங்குடியினர் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் மக்கள் குடியிருப்புகள் உள்ளன.இந்த கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் நோயாளிகளை கொண்டு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், நேற்று இப்பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (20) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை மருத்துவமனைக்கு தொட்டில் கட்டி சுமார் 15 கிமீ தூரம் மலைப்பாதையில் சுமந்து அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் வாகனம் மூலம் ஜல்லிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
Advertisement