கூட்டுறவு சங்கங்களில் காலி பணியிடம் திருப்பூரில் 1197 பேர் தேர்வு எழுதினர்
திருப்பூர், அக். 12: திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 112 உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு நேற்று திருப்பூர் குமரன் மகளிர் கல்லுரி மற்றும் கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் நடந்தது.இதில் கே.எஸ்.சி. அரசு பள்ளி தேர்வு மையத்தினை கலெக்டர் மனிஷ் ஆய்வு செய்தார். இதில் குமரன் கல்லுரியில் 713 பேரும், இ.கே.எஸ்.சி. பள்ளியில் 484 பேரும் என மொத்தம் 1197 பேர் எழுதினர்.
Advertisement
Advertisement