துணை ஜனாதிபதி வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்
திருப்பூர், நவ. 11: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில் திருப்பூருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரின் வருகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் அவர் வந்து சென்ற இடங்களில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டது.திருப்பூர் புஷ்பா ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், டவுன்ஹால், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்ட நிலையில் அவை இன்னும் அமைக்கப்படாமல் உள்ளது. குமரன் சாலை டவுன்ஹால் அருகே ரயில்வே மேம்பாலத்திலிருந்து இறங்கி ரயில்நிலையம் செல்லும் பாதையிலும், இதற்கு அருகாமையில் ரயில் நிலையம், ஊத்துக்குளி சாலையிலிருந்து குமரன் சாலை செல்லும் வாகனங்களும் சந்தித்துகொள்ளும் இடத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் இருந்த 2 வேகத்தடைகள் அகற்றப்பட்டிருப்பதால் வாகனங்கள் வேகமாக கடந்து செல்கிறது. எனவே, மீண்டும் அப்பகுதிகளில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை குறைக்கும் வகையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.