முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.1.92 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
Advertisement
வெள்ளகோவில், டிச. 7: முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் டெண்டர் முறையில் தேங்காய் ஏலம் நடைபெறுகிறது. முத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் 30 பேர், நேற்று 10,800 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ ரூ.68.90க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.34க்கும், சராசரி ரூ.56க்கும், மொத்தம் ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
நேற்று நடந்த கொப்பரை ஏலத்திற்கு 272 கிலோ கொப்பரை வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.180.05க்கும், குறைந்த பட்சமாக ரூ.120.10க்கும் ஏலம் போனது. மொத்தம் 272 கிலோ கொப்பரை, ரூ.42 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 15 விவசாயிகள் பங்கேற்றனர் என விற்பனைகூட மேற்பார்வையாளர் சங்கீதா தெரிவித்தார்.
Advertisement