நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை கோரி மனு
திருப்பூர்,டிச.5: திருப்பூர், தாராபுரம் கொளத்துப்பாளையம் அடுத்த கருங்காளிவலசு பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கூலி வேலை செய்து வருகிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனியார் நிதி நிறுவனத்தில் வார வட்டிக்கு ரூ.10 ஆயிரம் கடனாக பெற்றிருந்தேன். வாரத்தவணையாக ரூ.1100 வீதம் 5 வாரம் ரூ.5500 செலுத்தியுள்ளேன். தொடர்ந்து வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வீட்டிற்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டினர். மேலும், நான் ரூ.3.78 லட்சம் கட்ட வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளனர். இதே போல் பல தாழ்த்தப்பட்ட மக்களிடம் சிறிய தொகையை கடனாக கொடுத்து லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால் நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.