வீரபாண்டி போலீசார் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
12:59 AM Aug 05, 2025 IST
திருப்பூர், ஆக.5: திருப்பூர், வீரபாண்டி போலீசார் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கையெழுத்து இயக்கம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி தலைமை வகித்தார். நல்லூர் சரக உதவி கமிஷனர் தையல்நாயகி விளக்கி பேசினார். இங்கு வைத்த விழிப்புணர்வு பேனரில் பொதுமக்கள் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்தனர்.