வெள்ளகோவில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி
வெள்ளக்கோவில், ஆக.5: சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ் சார்பில் வெள்ளகோயில் வட்டாரத்தில் தாய்ப்பால் வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி பேரணியை துவங்கி வைத்தார். வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே புறப்பட்ட பேரணி முத்தூர் பிரிவு பிரிவு முதல் சென்று மீண்டும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை நடைபெற்றது.ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை நிலையான ஆதரவு அமைப்புகளை உருவாக்கு என்பது கருப்பொருள் ஆகும் பேரணியில் தாய்ப்பாலின் அவசியம் குறித்த பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 70-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மேலாளர் செந்தில்குமார் மற்றும் மருத்துவ அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.