பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி
வீரவநல்லூர், அக். 29: சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது. சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் அப்துல் கலாம் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதுமை திறன்களை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி நடந்தது. கண்காட்சியில் சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சிறந்த படைப்புகளுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்வின் போது ஸ்காட் மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜான் கென்னடி, சேரன்மகாதேவி பெரியார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பெருமாள் ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையில் சிறப்புரை ஆற்றினர். இதில் பேராசிரியர் சுந்தர்ராஜன், நிர்வாக அதிகாரி ஜெயபாண்டி, சிவில் துறை தலைவர் கிருஷ்ணசங்கர் மற்றும் பேராசிரியர்கள், 900 ஆயிரம் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.