ஆலங்குளம் அருகே பெய்த மழையில் மூதாட்டி வீடு இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்
ஆலங்குளம், நவ.28: ஆலங்குளம் அருகே பெய்த மழையில் மூதாட்டி வீடு இடிந்து விழுந்தது. ஆலங்குளம் அருகே குருவன் கோட்டை எமராஜன் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி லீலா (72). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். லீலா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரவு வீட்டில் லீலா தூங்கிகொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையில் வீட்டின் சுவரில் அதிர்வதை உணர்ந்த லீலா கண்விழித்து எழுந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது வீட்டின் சுவர் இடிந்து கீழே விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் வந்த விஏஓ, உடைந்த வீட்டை பார்வையிட்டு இதுகுறித்து ஆலங்குளம் தாசில்தார் ஆதிநாராயணனுக்கு தகவல் தெரிவித்தார்.