முக்காணி அரசு பள்ளி ஆண்டு விழா
ஆறுமுகநேரி,அக்.28: முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் சிதம்பரநாதன் தலைமை வகித்தார். கோவில்பட்டி தனியார் கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, திருச்செந்தூர் கல்லூரி முதல்வர் சசிப்ரியா, டிசிடபிள்யூ நிறுவன உதவித்தலைவர் சுரேஷ், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் சங்கரநாராயணன், துணைத்தலைவர் பரமசிவன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஷீபா, துணைத்தலைவர் காந்திமதி, முக்காணி முன்னாள் பஞ். தலைவர் தனம் என்ற பேச்சித்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் சற்குணராஜ் வரவேற்றார். உதவிதலைமையாசிரியர் ரோஸ்லின் ஆண்டறிக்கை வாசித்தார். இதில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவில் டிசிடபிள்யு நிறுவன பிஆர்ஓ பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்களும், மாணவ மாணவியரும், பெற்றோரும் செய்திருந்தனர்.