கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கழுகுமலை கோயிலில் அன்னதானம் வழங்கல்
கழுகுமலை,அக்.28: கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் வைத்து பெரியவன் பத்திர எழுத்தகம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை கழுகுமலை பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும் கயத்தார் ஒன்றிய திமுக செயலாளருமான சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ஜெயக்கொடி, திமுக கழுகுமலை நகரச்செயலாளர் கிருஷ்ணகுமார், முக்குலத்தோர் புலிப்படை கயத்தார் ஒன்றிய செயலாளர் காளிராஜ், கார்த்தி, ராஜு, மணி, கவுதம், பாக்கியராஜ், விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பத்திர எழுத்தர் பெரியராஜா செய்திருந்தார்.
Advertisement
Advertisement