பத்தமடை அருகே 2 கோயில்களில் கொள்ளை முயற்சி
வீரவநல்லூர், ஆக. 27: பத்தமடையை அடுத்த வெங்கடரங்கபுரம் கிராமத்தில் முத்தாரம்மன் மற்றும் இசக்கியம்மன் கோயில்கள் உள்ளன. இந்த இரு கோயில்களிலும் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். முத்தாரம்மன் கோயிலினுள் சிசிடிவி பொருத்தப்பட்டிருந்ததால் பணத்தை திருடாமல் தப்பிச் சென்றுள்ளனர். அருகிலுள்ள இசக்கியம்மன் கோயிலில் உண்டியலில் இருந்த சில்லரை காசுகளை அள்ளிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பத்தமடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement