திசையன்விளை விஎஸ்ஆர் பள்ளியில் விநாயகர் சதுர்த்தி, ஓணம் விழா
திசையன்விளை,ஆக.27: திசையன்விளை விஎஸ்ஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் கலாசார விழாக்களான விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் விஎஸ்ஆர் ஜெகதீஷ் தலைமை வகித்தார். இயக்குநர் சௌமியா முன்னிலை வகித்தார். துணை தலைமை ஆசிரியர் விஜயா தினகரன் தொகுத்து வழங்கினார் மாணவர்கள் ஓணத்தின் சிறப்பினை விளக்கும் வகையில் மகாபலி மற்றும் வாமனன் வேடம் அணிந்து குருநாடகம் நடத்தினர். ஆசிரியர்கள் கேரள பண்பாட்டை எடுத்துக்காட்டும் விதமாக ஆடை அணிந்து கேரள இசை மற்றும் நடனம் புரிந்து விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். அழகான பூக்கோலம் மற்றும் அறுசுவையும் கொண்ட உணவுகள் படைத்து வணங்கினர். ஓணம் கொண்டாடி விநாயகரை வணங்கி மகிழ்ந்தனர்.
Advertisement
Advertisement