களக்காடு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் கெய்ன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை
நெல்லை,ஆக.27: களக்காடு வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் கெய்ன்ஸ் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். முனைஞ்சிப்பட்டியில் நடைபெற்ற வட்டார மண்டல அளவிலான மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப்போட்டிகளில், வள்ளியூர் கெய்ன்ஸ் கல்விக்குழுமங்களின் சார்பாக கெய்ன்ஸ் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்குபெற்று வெற்றி வாகை சூடினர். யூ14, யூ17, யூ19 பிரிவுகளில், 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் 4X100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், ஆகிய போட்டிகளில் பங்குபெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். குழு விளையாட்டுகளில், இறகுப்பந்து யூ17, யூ19 மற்றும் கேரம் போட்டிகளிலும் பங்குபெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்றவர்களை பள்ளியின் நிறுவனர் மற்றும் தாளாளர் வசந்தா செல்வநாயகம், முதல்வர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பாராட்டினர்.