மணிமுத்தாறு பேரூராட்சி கூட்டம்
அம்பை,நவ.26: மணிமுத்தாறு சிறப்பு நிலை பேரூராட்சி மன்ற கூட்டரங்கில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் சித்தார்த் சிவா தலைமை வகித்தார். செயல் அலுவலர் ரமா தேவி, துணை தலைவர் பண்டாரம், சுகாதார அலுவலர் பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கோட்டி முத்து, செல்வக்குமார், முப்பிடாதி, தமிழரசி, பிரேமா, மோகன் ராஜா, பாமா கவுசல்யா, ஸ்டாலின், ஜெயா, உலகம்மாள் மற்றும் தலைமை எழுத்தர் மார்டின், எழுத்தர் பாலா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதோடு மணிமுத்தாறு பூங்கா செல்லும் சாலையை பொது நிதியில் இருந்து புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement
Advertisement