ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி
நெல்லை, அக்.26: வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பழம் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் ரோட்டரி கிளப் புளியங்குடி, ரோட்டரி கிளப் விருதுநகர், இதயம் குழுமங்கள் இணைந்து மூன்று நாள் “ப்ராஜெக்ட் பஞ்ச்” எனப்படும் ஆங்கிலப் பேச்சுத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. இந்நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக ரோட்டரியன் ஷ்யாம்ராஜ் பங்கேற்று மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். ரோட்டரி கிளப் புளியங்குடி தலைவர் செல்வசெந்தில், ரோட்டரி கிளப் நிறுவனர் தலைவர் டாக்டர் சுப்பிரமணியன், ரோட்டரி கிளப் முன்னாள் உதவி ஆளுநர் மாரியப்பன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்னபிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் டாக்டர் பாரதி ஒருங்கிணைத்தனர். பயிற்சியின் நிறைவாக சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.