திருக்குறுங்குடியில் மருத்துவ முகாம்
களக்காடு,செப்.22: திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயில் வனத்துறை சோதனை சாவடி அருகே இலவச மருத்துவ முகாம் நடந்தது. தலைமை வகித்த திருக்குறுங்குடி வனச்சரகர் யோகேஷ்வரன் முகாமை துவக்கிவைத்தார். இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலைய நடமாடும் மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, காய்ச்சல் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.
Advertisement
இதில் களக்காடு வனவர் மதன் குமார், திருக்குறுங்குடி பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் அப்பாதுரை மற்றும் திருக்குறுங்குடி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், நடமாடும் மருத்துவக் குழுவினர், வனத்துறை ஊழியர்கள், டி.வி.எஸ். அறக்கட்டளை களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
Advertisement