களக்காடு அருகே தொழிலாளி மீது தாக்குதல்
களக்காடு,ஆக.21: களக்காடு அருகேயுள்ள கோவிந்தபேரி வடக்குத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (48). கட்டிட தொழிலாளியான இவர் கீழசடையமான்குளம் கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த அசன விருந்தில் கலந்து கொண்டு விட்டு, வீட்டிற்கு சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் பைக்கில் வந்த அதே ஊரைச்சேர்ந்த வெட்டன் என்ற வெட்டும் பெருமாள், சுப்பிரமணியனை பெயரை சொல்லி அழைத்தார். இதனை அவர் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெட்டும் பெருமாள், அவரை தாக்கினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் களக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து வெட்டும்பெருமாளை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement