கீழப்பாவூர் பேரூராட்சியில் ரூ.20 லட்சத்தில் தார் சாலை பணி தொடக்கம்
பாவூர்சத்திரம், நவ.19: கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட கருமடையூரில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேரூராட்சி மன்றத்தலைவர் ராஜன் தலைமை வகித்து தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கிவைத்தார். கீழப்பாவூர் பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ், துணைதலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3வது வார்டு கவுன்சிலர் மாலதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பொன்செல்வன், பேரூராட்சி கவுன்சிலர்கள் விஜி ராஜன், இசக்கிமுத்து, முத்துசெல்வி, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் சுதாகர், அலுவலக பணியாளர்கள் தர்மராஜ், தனுஷ்கோடி, குமார் உட்பட அனைத்து நிலை பணியாளர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement