வள்ளியூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் மக்கள் நலப்பணி
வள்ளியூர், நவ. 19: வள்ளியூர் யூனியன் கூட்டம் நடந்தது. இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல பணிகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு வள்ளியூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமை வகித்தார். வள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சாந்தி கலா, வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மக்கள் நல பணிகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.இதில் கவுன்சிலர்கள் ரைகானா ஜாவித், பிலிப், பொன்குமார், டெல்சி ஒபிலியா, தாய் செல்வி இளங்கோவன், ஜெயா, மகாலட்சுமி, மல்லிகா அருள், பாண்டித்துரை, சாரதா, ஜெயலெட்சுமி, அனிதா மற்றும் ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Advertisement
Advertisement