நெல்லையில் நவ.21ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தியாகராஜநகர்,நவ.19: நெல்லை பெருமாள்புரம் சி காலனி சிதம்பரம்நகரில் உள்ள நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10:30 மணிக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றிதழுடன் பங்கேற்று பயனடையலாம். இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது என வேலைவாய்ப்பு துறை உதவி இயக்குனர் மரிய ஆண்டனி தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement