போதையில் கீழே விழுந்த தொழிலாளி சாவு
கேடிசிநகர், ஆக. 19: வள்ளியூர் அருகே உள்ள சமூகரெங்கபுரம் பகுதியைச்சேர்ந்தவர் சீதாராமன் (54). கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வள்ளியூர் ஏர்வாடி ரோட்டில் நடந்து சென்ற அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதன் பின்னர் வீட்டிற்கு சென்ற அவருக்கு காலில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு சீதாராமன் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சீதாராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement