2000 பனை விதைகள் விதைப்பு
சாத்தான்குளம், நவ. 18. சாத்தான்குளம் தாலுகா பண்டாரபுரம் ஊராட்சி பகுதியில் 1 லட்சம் பனை விதை நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பண்டாரபுரம் குளம் பகுதியில் 2000 பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பஞ். முன்னாள் தலைவர் உதயம் பாலசிங், பனை விதை நடும் பணியை தொடங்கி வைத்தார். விவசாய சங்க துணை தலைவர் ராஜபாண்டி முன்னிலை வகித்தார் பனை விதை நடும் பணிகளில் ஆசிரியை சந்திரா, வேளாண் துறை அலுவலர் சரத்குமார், உடற்கல்வி ஆசிரியர் ஜெனிஸ்கர், தொழிலதிபர் ஏசா, கணினி ஆசிரியர் ஜெப சித்ரா மற்றும் காட்வின், எட்வின் சேவியர் ஜோஸ் சேவியர், எஸ்ரா, ஜூடித் சக்தி விக்னேஸ்வரன், ஜெபராஜ் உள்பட பலர் பங்கேற்று 2 ஆயிரம் பனை விதைகள் விதைத்தனர் .
Advertisement
Advertisement